ராசிபுரம் அருகே தங்க நகையை ஏமாற்றிய தங்க கடை உரிமையாளர் கைது...

X
Rasipuram King 24x7 |12 Jan 2026 10:35 PM ISTராசிபுரம் அருகே தங்க நகையை ஏமாற்றிய தங்க கடை உரிமையாளர் கைது...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சிவானந்தா சாலை பகுதியை சேர்ந்த பாபு என்பவரது மகன் ரமேஷ்(38) இவர் ராசிபுரம் கடைவீதி பகுதியில் MS பாபு ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வந்தார்.கடந்த 2021ம் ஆண்டு ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்த வளர்மதி(58) என்பவர் அவரது கடையில் சுமார் 8 சவரன் மதிப்பிலான தங்க செயின் வாங்கியதாகவும்,6 மாதங்களில் சேதமடைந்ததால் அதனை சீரமைப்பதற்காக ரமேஷிடம் வழங்கி உள்ளார். ஆனால் ரமேஷ் சீரமைப்பதற்காக வாங்கப்பட்ட நகையை வளர்மதிக்கு வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும் பின்னர் ரமேஷ் கடையை காலி செய்துவிட்டு தலைமறைவானதாக சொல்லப்படுகிறது. வளர்மதி தான் நகையை பறிகொடுத்த நிலையில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.புகாரை பெற்ற நாமக்கல் எஸ் பி மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கூறிய நிலையில் ராசிபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அவரது தொலைபேசி அழைப்புகள் மூலம் அவர் இருப்பிடத்தை கண்டறிந்து, திருப்பூர் பகுதியில் மெடிக்கல் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.அங்கு சென்ற ராசிபுரம் காவல்துறையினர் ரமேஷை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர். மூதாட்டி வளர்மதிக்கு எட்டு சவரன் தங்க நகை வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதால் அவரது மீது வழக்கு பதிவு செய்து ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். ரமேஷ் நகைக்கடை வைத்திருந்த போது இது போன்று பல நபர்களிடம் பணமாகவும், நகையாகவும் பெற்று மோசடி செய்தது குறிப்பிடத்தக்கது...
Next Story
