விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா

X
Perambalur King 24x7 |13 Jan 2026 10:51 AM ISTசம நல்லிணக்க பொங்கல் விழாவில் அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்து, இசுலாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் துறைமங்கலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பாரம்பரிய முறையில் மண்பானையில் பொங்கல் வைத்து பொங்கல் விழாவை இந்து, இசுலாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக கொண்டாடினர். நிகழ்வில் மகளிர் அணி மாநில துணைச் செயலாளர் செல்வாம்பாள், மாவட்ட செயலாளர் ரேணுகா நகரச் செயலாளர் தங்க சண்முகசுந்தரம் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
