குளித்தலை கிராமிய கூட்டம் அரங்கில் மண்டல வளர்ச்சி நிர்வாகிகள் தேர்வு
Kulithalai King 24x7 |13 Jan 2026 12:51 PM ISTவேளாண் அறிவியல் கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் ஜெயராமன் தலைமை
கரூர் மாவட்டம் குளித்தலை கிராமியம் கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு அன்பில் வேளாண் அறிவியல் கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர். வளையப்பட்டி ஜெயராமன் தலைமை வகித்தார். இதில் குளித்தலை மண்டல வளர்ச்சி சங்கத்தின் தலைவராக கல்விச்செம்மல் பி.வேதாச்சலம், செயலாளராக பொறியாளர் வி.தர்மராஜன், இணை செயலாளர்களாக எஸ்.மதி , ஓய்வு கோட்டாட்சியர் ஜெயமூர்த்தி பொருளாளராக பொன்னுச்சாமி, துணை தலைவர்களாக கல்வியாளர் சந்திர மோகன், சமூக ஆர்வலர்கள் வேப்பங்குடி அண்ணாதுரை, நாகராஜன், ஆலோசகர்களாக கிராமியம் டாக்டர்.பி. நாராயணன், திருச்சி பத்மஸ்ரீ. சுப்புராமன் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ந்து சங்கத்திற்கு அலுவலகம் திறப்பது , சங்கத்தினை பதிவு செய்வது தொடர்பாக ஆலோசனைகள் நடந்தது. இதில் தோகைமலை சமூக ஆர்வலர்கள் பிச்சமணி, முன்னாள் டி.எஸ்.பி மாணிக்கம், முன்னாள் கூட்டுறவு துறை அதிகாரி விஜயராகவன், புதுகை முத்தமிழ் சங்கத் தலைவர் கவிஞர் ஜெயா வேதாச்சலம், கடலூர் சித்தா மருத்துவர் சோழராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
Next Story



