தேசிய இளைஞர் தினம் கொண்டாட்டம்

தேசிய இளைஞர் தினம் கொண்டாட்டம்
X
குமாரபாளையத்தில் தேசிய இளைஞர் தினம் விடியல் ஆரம்பம் சார்பில் கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் மேற்கு காலனியில் விவேகானந்தர் பிறந்த தின விழா தேசிய இளைஞர் தினமாக விடியல் ஆரம்பம் சார்பில் அதன் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. விவேகானந்தர் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் வினாடி வினா,பேச்சு,கட்டுரை போட்டிகள் நடத்தி, அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசாக புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாற்றை பற்றி மாணாக்கர்கள் பேசினார்கள்.மாணவர்களுக்கு கடலைமிட்டாய் வழங்கப்பட்டது. சமூக சேவகர் சித்ரா,ராம்கி,தீனா,சசி,ஜமுனா உள்பட [பலர் பங்கேற்றனர்.
Next Story