நாமக்கல்லில் சிவனடியார்கள் சார்பில் இந்து குடும்ப சங்கம விழா !

X
Namakkal King 24x7 |13 Jan 2026 8:23 PM ISTசேந்தமங்கலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
நாமக்கல்லில் இந்து குடும்பம் சங்கம் விழா மற்றும் திருவாசக வேள்வி (முதலாம் ஆண்டு) நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள எஸ்பிஎஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் முதல் நிகழ்வாக தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த 75 சிவனடியார்கள் திருவாசக முற்றோதல் நடத்தினார்கள், பின்னர் இன்றைய சூழலில் இந்து சமூக பண்பாடு சீராக்குகின்றனவா? சீரழிகின்றனவா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைப்பெற்றது இதில் பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து வாதடினார்கள் நடுவராக முனைவர் சு.பங்காரு கலந்து கொண்டு தீர்ப்பு வழங்கினார்.தொடர்ந்து இந்திய குடிமகனின் கடமைகள், சமுதாய நல்லிணக்கம், இந்து குடும்ப சிறப்பு, சுற்றுச்சூழல் போன்ற தலைப்பில் பல சொற்பொழிவுகள் நடைப்பெற்றது. தொடர்ந்து சிரிப்பு யோகா, சிலம்பம் பரத நாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.சேந்தமங்கலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திர சேகரன் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இவ்விழாவில் குலதெய்வ வழிபாடு, ஆலய வழிபாடு, ஜாதி, மொழி பிரிவினைகள் உயர்த்தவர்கள், தாழ்ந்தவர்கள், அகற்றி ஒருமைப்பாடு மிக்க பண்பட்ட சமுதாயத்தை உருவாக்க வேண்டும் சுற்றுச்சூழல் மாசு, பொது சொத்துக்களை பாதுகாப்பது, மின்சாரம், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல், பணம் பெறாமல் தேர்தலில் 100 % வாக்களிப்பது போன்றவை பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்கள், தொழிலாளர்கள், மூத்த பொறுப்பாளர்கள், சுப்ரமணியம், ராஜன், கொங்கு பிரிவு, நிர்வனங்களின் நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர் மேலும் தூய்மை பணியாளர்கள, சலவைதொழிலாளர்கள், கோவில் அர்ச்சர்கள் கௌவரவிக்கப்பட்டார்கள். விழா ஏற்பாடுகளை முனைவர். சு.பங்காரு, முருகேசன், முருகன்,காமராஜ் மற்றும் விழாக் குழுவினர்கள் நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த சுமார் 75 பேர்கள் செயல்பட்டனர்.நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த சுமார் 500 பேர் கலந்து கொண்டனர். இறுதியாக மணிவண்னன் நன்றி கூறினார்.
Next Story
