ராசிபுரம் அருகே நம்ம ஊரு மோடி பொங்கல் மாநில துணைத்தலைவர் கே.பி ராமலிங்கம் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினார்...

X
Rasipuram King 24x7 |13 Jan 2026 9:11 PM ISTராசிபுரம் அருகே நம்ம ஊரு மோடி பொங்கல் மாநில துணைத்தலைவர் கே.பி ராமலிங்கம் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினார்...
ராசிபுரம் அருகே நம்ம ஊரு மோடி பொங்கல் மாநில துணைத்தலைவர் கே.பி ராமலிங்கம் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினார்... 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி,சேலை வழங்கியும்,பள்ளி குழந்தைகளுக்கு உபகரணங்களை வழங்கினார்... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட NO:3 குமாரபாளையம் பகுதியில் பாஜக சார்பில் நம்ம ஊர் மோடி பொங்கல் விழாவானது நடைபெற்றது. பொங்கல் விழாவில் பாஜக மாநில துணைத்தலைவர் சேலம் பெருங் கோட்ட பொறுப்பாளர் டாக்டர் கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடினார். மேலும் அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து அனைவருக்கும் அன்னதானமும் வழங்கினார். அதனை தொடர்ந்து அதே பகுதியில் உள்ள பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு இலவச சேலைகளை வழங்கியும், கோம்பைக்காடு,அத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு டிபன்பாக்ஸ்,பென்சில் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வெண்ணந்தூர் ஒன்றிய தலைவர் திரு. P.முத்துசாமி வரவேற்றார். ST அணி முன்னால் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. P.தியாகராஜன் முன்னிலை வகித்து ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்வில் T. மாணிக்கம் சுற்றுசூழல் பிரிவு மாவட்ட செயலாளர் J. சுதாகர் மாவட்ட செயலாளர்அறிவுச்சொற்பிரிவு N. உலகநாதன், மாவட்ட செயலாளர் P.சிவக்குமார் ஒன்றிய செயலாளர், மற்றும் மாநில திட்ட பிரிவு லோகேந்திரன், மாவட்ட செயலாளர் தமிழரசு, மாவட்ட மகளிர் அணி திவ்யா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
