திருச்செங்கோடு நகராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் பொங்கல் சீர் வழங்கி வரவேற்பு

திருச்செங்கோடு நகராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பான முறையில் கொண்டாடப் பட்டது நகராட்சி அருகில் இருந்து காளை மாட்டு வண்டியில் திருச்செங்கோடு MLAஈஸ்வரன்மாவட்ட திமுக செயலாளர்கே.எஸ்.மூர்த்தி திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினிசுரேஷ் பாபுஆகியோர் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர்
.திருச்செங்கோடு நகராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது இதனை ஒட்டி சிலம்பாட்டம் ஒயிலாட்டம்பொய்க்கால் குதிரை ஆட்டம், சுருள் கத்தி விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக நகராட்சிக்கு பொங்கல் விழாவில் கலந்து கொள்ள வந்த தூய்மை பணியாளர்களை நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு மலர் தூவி வரவேற்றார். தொடர்ந்து திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி திருச்செங்கோடு மேற்கு நகர திமுக செயலாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன் கிழக்கு நகர செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் விழாவுக்கு வருகை தந்த போது நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு ஆகியோர் வரவேற்று காளை மாட்டு வண்டியில் ஏற்றிநகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்த வந்தனர் வந்தனர்.ஊர்வலம் தொடங்கும் இடத்தில் கிறிஸ்துவ சமுதாயத்தைச் சேர்ந்தகிறிஸ்தவராஜ் பாதிரியார் தலைமையில் ஆண் பெண் பாதிரியார்கள் வருகை தந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மேற்கு ரத வீதி வழியாக ஊர்வலம் வந்தபோது அண்ணா சிலை அருகேசுல்தான் ஷெரிப் என்பவர்கள் தலைமையில் 50க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெருமக்கள் ஊர்வலத்தை எதிர்கொண்டு வரவேற்று பொங்கல் சீர் வழங்கினார்கள் அங்கிருந்து பொங்கல் பானைகளுடன் ஊர்வலமாக வந்தனர் திருச்செங்கோடு தேர் நிலை அருகே வரைஊர்வலம் வந்தது ஊர்வலத்தின் இறுதி வரை ஈஸ்வரன் மற்றும் கே எஸ் மூர்த்தி நளினி சுரேஷ் பாபு ஆகியோர் மாட்டு வண்டியிலேயே பயணம் செய்தனர் வழி நெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் இந்த ஊர்வலத்தை பார்த்து மகிழ்ந்தனர் தொடர்ந்து தேர்தலை அருகே நாலு கால் மண்டபம் சமீபமாக அமைக்கப்பட்டிருந்த பொங்கல் விழா மேடையில் கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் பொங்கல் பானைகள் மற்றும் சீர்வரிசை பொருள்களைஎம் எல் ஏ ஈஸ்வரன் மாவட்ட செயலாளர் கே எஸ் மூர்த்தி ஆகியோரிடம் வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்துதூய்மை பணியாளர்கள் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்ட இசை நாற்காலி போட்டி,கும்மியடிக்கும் விளையாட்டு கையிருளுக்கும் போட்டி,ஆகியவை நடைபெற்றது இதனைத் தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர்கள் நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு உடன் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கினார்கள். நகராட்சி சார்பில் நடத்தப்பட்ட இந்த சமத்துவ பொங்கல் விழா பிரம்மாண்டமாக இருந்ததால் திருச்செங்கோடு முழுவதும்பேசு பொருளாக ஆகி உள்ளது.நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகராட்சி பொறியாளர் சரவணன்,உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள்இருபால் நகர் மன்ற உறுப்பினர்கள் தூய்மை பணியாளர்கள்,டிபிசி பணியாளர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story