ராசிபுரம் அடுத்த அத்தனூர் சமத்துவபுரத்தில் பொங்கல் விழா. ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
தமிழகம் முழுவதும் நாளை பொங்கல் விழாவானது கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று பல்வேறு கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகள் பொங்கல் விழாவை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்தனூர் பேரூராட்சி பகுதியில் உள்ள சமத்துவ புறத்தில் சமத்துவ பொங்கல் விழாவானது நடைபெற்றது.விழாவில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உள்ளிட்டோர் சமத்துவ பொங்கல் விழாவில் பொதுமக்களுடன் கலந்து கொண்டு பொங்கல் வைத்து, பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு பொங்கல் வைத்தனர். அதனைத் தொடர்ந்து சிறுவர் சிறுமிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற நிலையில் அதில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பானை உடைக்கும் போட்டியில் கலந்து கொண்டு கண்களைக் கட்டிக் கொண்டு பானை உடைக்க முயற்சி செய்தார்.விழாவில் வள்ளி கும்மி ஆட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வள்ளி கும்மி ஆட்டத்தில் கலந்து கொண்டு ஆட்டம் ஆடி துவங்கி வைத்தார். விழாவில் கோலப்போட்டி, கோலாட்டம்,வள்ளி கும்மி மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர்கள் முதல் பெரியோர்களுக்கு பரிசுகளை வழங்கி பொங்கல் வாழ்த்துக்களை ஆட்சியரும்,அமைச்சரும் தெரிவித்தனர்...




