குளித்தலையில் டிஎஸ்பி தலைமையில் சமத்துவ பொங்கல்

Kulithalai King 24x7 |15 Jan 2026 1:50 PM ISTஆதரவற்ற முதியோர்களை வரவழைத்து வேஷ்டி, சட்டை, சேலை வழங்கிய டிஎஸ்பி
கரூர் மாவட்டம் குளித்தலை உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு தண்ணீர்பள்ளியில் உள்ள காப்பகத்தில் உள்ள முதியோர்களை வாகனம் மூலம் அலுவலகத்திற்கு அழைத்து வந்து அவர்களுக்கு சமத்துவ பொங்கல் படைத்து முதியோர்களுக்கு வாழை இலையில் இனிப்பு பொங்கல் பரிமாறி சாப்பிட வைத்தனர். மேலும் 2 ஆண்களுக்கு வேஷ்டி சட்டை மற்றும் 8 பெண்களுக்கு சேலைகளை பொங்கல் பரிசாக வழங்கி கொண்டாடினர். இதில் குளித்தலை இன்ஸ்பெக்டர் கருணாகரன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அசோகன், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் இரத்தனகிரி மற்றும் அலுவலகத்தில் பணிபுரியும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
