ஆற்காடு மகாத்மா காந்தி முதியோர் இல்லத்தில் பொங்கல் விழா

X
Ranipet King 24x7 |16 Jan 2026 9:47 AM ISTஇவ்விழாவிற்கு முதியோர் இல்ல தலைவர் ஜெ.லட்சுமணன் தலைமை தாங்கினார்.செயலாளர் ஜெ.சஜன்ராஜ் ஜெயின் பொருளாளர் பி.என் பக்தவச்சலம்,துணைத் தலைவர் பென்ஸ் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.எல் திருஞானம் அனைவரையும் வரவேற்றார்.
ஆற்காடு மகாத்மா காந்தி முதியோர் இல்லத்தில் பொங்கல் விழா ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காடு மகாத்மா காந்தி இலவச முதியோர் இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு முதியோர் இல்ல தலைவர் ஜெ.லட்சுமணன் தலைமை தாங்கினார்.செயலாளர் ஜெ.சஜன்ராஜ் ஜெயின் பொருளாளர் பி.என் பக்தவச்சலம்,துணைத் தலைவர் பென்ஸ் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.எல் திருஞானம் அனைவரையும் வரவேற்றார். ரத்தினகிரி பாலமுருகன டிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் சிறப்பு பூஜை செய்தனர். இவ்விழாவில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், முன்னாள் வேலூர் மாவட்ட கலெக்டர் செ.ராஜேந்திரன், சென்னை தனலட்சுமி பொறியியல் கல்லூரி நிறுவனத் தலைவர் வி.பி ராமமூர்த்தி, ஜோதிடர் குமரேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர். இதனைத் தொடர்ந்து முதியோர்களுக்கு புத்தாடைகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இந்த விழாவில் டாக்டர் சரவணன், , உதவும் உள்ளங்கள் செயலாளர் சந்திரசேகர் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
