கலவையில் மது போதையில் மனைவியின் கையை துண்டாக வெட்டிய கணவர் கைது..

X
Ranipet King 24x7 |16 Jan 2026 9:52 AM ISTராணிப்பேட்டை மாவட்டம் கலவை பழங்குடியின பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (65) இவர் மரம் வெட்டும் தொழிலை செய்து வருகிறார்.இந்நிலையில் நேற்று மாலை அதீத மது போதையில் இருந்த ஆறுமுகம் தெருவில் தேவையில்லாத கதைகளை பேசி வந்துள்ளார்.
கலவையில் மது போதையில் மனைவியின் கையை துண்டாக வெட்டிய கணவர் கைது... ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பழங்குடியின பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (65) இவர் மரம் வெட்டும் தொழிலை செய்து வருகிறார்.இந்நிலையில் நேற்று மாலை அதீத மது போதையில் இருந்த ஆறுமுகம் தெருவில் தேவையில்லாத கதைகளை பேசி வந்துள்ளார். இதனை தட்டிக் கேட்ட மனைவி லட்சுமிக்கும் ஆறுமுகத்துக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் தனது மரம் வெட்டும் கத்தி கொண்டு மனைவியின் கையை வெட்டியுள்ளார். இதில் லட்சுமியின் கை துண்டானது. லட்சுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காயப்பட்டவரை மீட்டதுடன் துண்டான கையுடன் கலவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஆறுமுகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைக்கேரிய மது போதையால் மனைவியின் கையை வெட்டிய முதியவர் செயல் அப்பகுதியை பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
