ராசிபுரத்தில் ஆட்டம் பாட்டத்துடன் பொங்கல் பண்டிகையை கோலகலமாக கொண்டிய காவலர்கள்!

X
Rasipuram King 24x7 |16 Jan 2026 6:59 PM ISTராசிபுரத்தில் ஆட்டம் பாட்டத்துடன் பொங்கல் பண்டிகையை கோலகலமாக கொண்டிய காவலர்கள்!
பணிச்சுமைகளுக்கு இடையே கடமை முக்கியம் எனக் இருக்கக் கூடிய காவலர்கள் விழாக்களை குடும்பத்தோடு கொண்டாடுவது கடினம். அந்த மனக்குறையை தீர்க்கும் வகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் ஒன்றிணைந்து, தைப்பொங்கல் திருநாளை, ராசிபுரம் காவலர் குடியிருப்பு பகுதியில் உள்ள வளாகத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் காவல்துறையினர் பாரம்பரிய வேட்டி, சட்டை அணிந்தும், பெண் போலீசார், சேலை அணிந்து வந்தும், கரும்பு, மஞ்சள் தோரணங்கள் வைத்து மண்பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதைத் தொடர்ந்து திரைப்பட பாடல்களுக்கு காவலர்கள் உற்சகமாக நடனமாடி பொங்கல் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடினர். மேலும் அனைவரும் ஒன்றாக குழு புகைப்படம் எடுத்தும் பொங்கலோ பொங்கல் என கோசங்கள் எழுப்பி உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பொங்கல் பண்டிகையில் ராசிபுரம் காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம், வெண்ணந்தூர் காவல் நிலையம், நாமகிரிப்பேட்டை, ஆயில்பட்டி, மங்களபுரம், பேளுக்குறிச்சி உள்ளிட்ட காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், போக்குவரத்து காவல்துறை சேர்ந்த காவலர்கள், சிஐடி காவல்துறையினர், காவல் அலுவலக பணியாளர்கள் என 100.க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
Next Story
