ராசிபுரம் நகர பாரதிய ஜனதா கட்சி நகர தலைவருக்கு அதிமுக நிர்வாகி வாழ்த்து ...

ராசிபுரம் நகர பாரதிய ஜனதா கட்சி நகர தலைவருக்கு அதிமுக நிர்வாகி வாழ்த்து ...
X
ராசிபுரம் நகர பாரதிய ஜனதா கட்சி நகர தலைவருக்கு அதிமுக நிர்வாகி வாழ்த்து ...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தபால் நிலையம் எதிரில் குமாரசாமி தெரு பகுதியில் நேற்று ராசிபுரம் நகர பாரதிய ஜனதா கட்சி நகர தலைமை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த அலுவலகத்தை பாஜக மாநில துணைத்தலைவர் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் டாக்டர் கே.பி. ராமலிங்கம் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து நகரத் தலைவர் பி. வேலு அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பலரும் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிமுக ராசிபுரம் நகர கழக செயலாளர் எம். பாலசுப்பிரமணியன், கட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று நகரத் தலைவர் பி.வேலு, அவர்களுக்கு சாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பாஜக ராசிபுரம் நகர தலைவர் பி.வேலு , அவருக்கு சால்வை அணிவித்து நன்றி கூறினார். இந்த நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் கந்தசாமி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் பூபதி, 1.வது வார்டு நகர மன்ற உறுப்பினர் டி. மகாலட்சுமி, கார்த்தி, வார்டு செயலாளர் பி. சர்தார், பரமேஸ்வரன், செல்லமுத்து, ஸ்ரீதர், சரவணன், மகளிர் அணி மகேஸ்வரி, ஷகிலா, உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்..
Next Story