ராசிபுரம் அருகே மாடு பூ தாண்டும் விழா. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்பு...

X
Rasipuram King 24x7 |16 Jan 2026 9:50 PM ISTராசிபுரம் அருகே மாடு பூ தாண்டும் விழா. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்பு...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த போடிநாயக்கன்பட்டி பகுதியில் மாடு பூ தாண்டும் விழாவானது நடைபெற்றது.விழாவில் போடிநாயக்கன்பட்டி, தம்மநாயக்கன்பட்டி, பெரியூர், அப்பநாயக்கன்பட்டி, மின்னாம்பள்ளி உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கோவில் மாடுகள் கலந்து கொண்ட நிலையில் போடிநாயக்கன்பட்டி ஊர் எல்லைப் பகுதியில் இருந்து மாடுகளை மேளதாளங்கள் முழங்க இளைஞர்கள் நடனமாடி ஊரைச் சுற்றி ஊர்வலமாக அழைத்து வந்தனர்.அங்கு மாடு பூ தாண்டும் விழாவில் ஒரே நேர்கோடாக பூ,மஞ்சள், பழம்,குங்குமம் போடப்பட்டு எதிர் திசையிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் நின்று கொண்டிருந்த மாடுகள் சீறிப்பாய்ந்து எல்லைக்கோட்டை வந்தடைந்தது. இதில் முதலாக வெற்றி பெற்ற திருமலைபட்டி அருகே உள்ள கும்மநாயக்கனூர் கிராம கோயில் மாட்டிற்கு அப்பகுதியை சேர்ந்த பெரியவர்கள் காளைக்கு பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்...
Next Story
