வடகரை ஆத்தூரில் எம்ஜிஆர் மன்றம் அலுவலகம் திறப்பு.

வடகரை ஆத்தூரில் எம்ஜிஆர் மன்றம் அலுவலகம் திறப்பு.
X
வடகரை ஆத்தூரில் எம்ஜிஆர் மன்றம் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
பரமத்தி வேலூர், ஜன. 17:  நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வடகரை ஆத்தூரில் எம்ஜிஆர் 109 வது  பிறந்த நாளை முன்னிட்டு  எம்ஜிஆர் மன்றம் அலுவலக திறப்பு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் வழக்கறிஞர் பாலுசாமி, கபிலர்மலை ஒன்றிய குழு தலைவர் ஜே.பி.ரவி, துணைத் தலைவர் யசோதா செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர் வைத்தியநாதன் அனைவரையும் வரவேற்றார். எம்ஜிஆர் மன்ற பொறுப்பாளர்கள் ஜோதி, யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் இன்ஜினியர் சேகர் கலந்துகொண்டு எம்ஜிஆர் மன்ற அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினர். மேலும் விழாவில் கிளைக் கழகச் செயலாளர்கள், மகளிர் அணி பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story