ராசிபுரத்தில் அமமுக சார்பில் புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா...

X
Rasipuram King 24x7 |17 Jan 2026 8:25 PM ISTராசிபுரத்தில் அமமுக சார்பில் புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், அவர்களின் ஆணைக்கிணங்க கொங்கு மண்டல பொறுப்பாளர் கழகத் துணை பொது செயலாளர் முன்னாள் அமைச்சர் C. சண்முகவேல் அவர்களின் ஆலோசனைப்படி நாமக்கல் வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அனைத்து நிர்வாகிகள் சார்பாக சனிக்கிழமை 17/1/26 எம்ஜிஆர் அவர்களின் 109ஆவது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.. ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவ படத்திற்கு நாமக்கல் வடக்கு மாவட்ட கழக செயலாளர் ஏ.பி. பழனிவேல், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி புகழ் கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து 1000 .க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம், லட்டு பொங்கல், மற்றும் பெண்களுக்கு சேலை வழங்கி சிறப்பித்தனர். தொடர்ந்து இந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பொற்கால நல்லாட்சி புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நல ஆட்சியும் அமைத்திட மக்கள் செல்வர் கழக பொது செயலாளர் TTV. அவர்களின் தலைமையிலே தமிழகத்தில் ஆட்சி அமைத்திட ஓயாத உழைத்து ஆட்சி மாற்றத்தை கொண்டு வர இந்நன்னாளில் உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவை தலைவர் எஸ். பன்னீர்செல்வம், மாவட்ட கழக பொருளாளர் வழக்கறிஞர் பி.அன்பு செழியன், மாவட்ட கழக இணைச் செயலாளர் இ.கே.திலகம், மாவட்ட கழக துணை செயலாளர் பி. அம்பிகா, பொதுக்குழு உறுப்பினர் டி. உதயகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்த ராசிபுரம் நகரக் கழக செயலாளர்கள் கிழக்கு ஆர்.டி.தர்மராஜ், மேற்கு பூபதி, ஆகியோர் செய்திருந்தனர். மேலும் ஒன்றிய கழக செயலாளர்கள் ராசிபுரம் கிழக்கு வி.ராஜா, சேந்தமங்கலம் பி.முருகேசன், நாமகிரிப்பேட்டை கிழக்கு டி.சதீஷ்குமார், கொல்லிமலை கே.சி.ரவிச்சந்திரன், எருமப்பட்டி கிழக்கு சரவணன் ,வெண்ணந்தூர் கிழக்கு சீனிவாசன், ராசிபுரம் மேற்கு எம்.கே.பாலசுப்பிரமணியம் , நாமகிரிப்பேட்டை மேற்கு சுப்பராயன், கண்ணன் என்கிற சீனிவாசன், வெண்ணந்தூர், மேற்கு ஜெகநாதன் எருமப்பட்டி மேற்கு மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள், பேரூர் கழக செயலாளர் பெரியசாமி, நாமகிரிப்பேட்டை வெங்கடாசலம், புதுப்பட்டி ரஞ்சித் குமார், பட்டணம் சேகர், வெண்ணந்தூர் தாமோதரன் , அத்தனூர் மகேந்திரன், காளப்பநாயக்கன்பட்டி. சுரேஷ் , சேந்தமங்கலம் ராஜா, பிள்ளா நல்லூர் சங்க மேஸ்வரன், பிள்ளா நல்லூர் அசோக் குமார், மற்றும் மாவட்ட சார்பு அணி மாவட்ட செயலாளர் மேகநாதன், அம்மா பேரவை பாலு, மீனவரணி தினேஷ் குமார், தொழில்நுட்பத்துறை மெகஸ்தானிஷ் மாணவர் அணி கோடீஸ்வரன், அம்மா தொழிற்சங்கம் ரமேஷ்குமார், வழக்கறிஞர் அணி கண்ணன், ஓட்டுனர் அணி கந்தசாமி, ஈஸ்வரன், சுற்றுச்சூழல் அணி கோகிலா, இளம்பெண்கள் பாசறை துரைசாமி, அம்மா பேரவை செல்வராணி, மகளிர் அணி குட்டி என்கிற நட்ராஜ், சிவனேசன், கொல்லிமலை வார்டு கழக செயலாளர்கள் ஊராட்சி கழக செயலாளர்கள், கிளை கழக செயலாளர்கள், மற்றும் மகளிர் அணி, இளைஞர்கள் அணி, பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாள் விழா கலந்து கொண்ட கழக நிர்வாகிகள் அனைவருக்கும் மாவட்ட கழக செயலாளர் ஏ.பி. பழனிவேல் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
Next Story
