மொழிப்போராட்டம் மற்றும் இரு மொழி கொள்கைகளை அழகாக சித்தரித்துள்ளார்கள்

ஆ.இராசா.எம்.பி., பராசக்தி திரைப்படம் பார்த்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்! 1965 - ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போராட்டம் மற்றும் இரு மொழி கொள்கைகளை அழகாக சித்தரித்துள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.
பெரம்பலூர் ராம் திரையரங்கில் கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., பராசக்தி திரைப்படம் பார்த்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்! 1965 - ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போராட்டம் மற்றும் இரு மொழி கொள்கைகளை அழகாக சித்தரித்துள்ளார்கள் எனவும் தெரிவித்தார்! மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன்- சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் ராம் திரையரங்கில் கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., பராசக்தி திரைப்படத்தை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கட்சியினருடன் இன்று மதியம் 3 மணி காட்சி பார்த்தார்.படம் முடிந்து பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆ.இராசா.எம்.பி. கூறுகையில், 1965- ல் நடைபெற்ற மொழிப்போராட்டத்தை அழகாக சித்தரித்துள்ளார்கள். தமிழ் மொழி காக்க, இன்னுயிர் ஈத்த அந்த மொழிப்போர் தியாகிகளை நினைவுகூறும் வகையில் இத்திரைப்படம் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டிற்கு தனித்தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம், சுமரியாதை சட்டம், இந்தி பேசாத மாநிலங்கள் விரும்புகிற வகையில் ஆங்கிலமும், அந்தந்த மாநிலத்தின் தாய்மொழியும்தான் இரு மொழி கொள்கையாக இருக்கும் என்ற இந்த மூன்று கொள்கைகளும் இருக்கிற வரையில், நான் மறைந்தாலும், இந்த தமிழ்நாட்டை இந்த அண்ணாதுரை தான் ஆள்கிறார் என்பதை சட்டமன்றத்தில் அவர் குறிப்பிட்டது இன்றும் உண்மை என்று உணர்ச்சிப்பூர்வமாக இந்த படம் இருக்கிறது என்றும் அதில் நடித்த, இயக்கிய அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறினார். அப்போது மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார்,தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால், வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கி.முகுந்தன், செ.அண்ணாதுரை, பட்டுச் செல்வி ராஜேந்திரன், ஆர்.முருகேசன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர்,சன்.சம்பத், ஒன்றிய கழக செயலாளர்கள் எம்‌.இராஜ்குமார், செ.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் டாக்டர் செ.வல்லபன், ந.ஜெகதீஷ்வரன், அழகு.நீலமேகம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story