மாணவரணி சார்பில் தமிழ் தீ பேரணி.

மாணவரணி சார்பில் தமிழ் தீ பேரணி.
X
குமாரபாளையத்தில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தூணுக்கு திமுக மாணவர் அணி சார்பில் பேரணி மற்றும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி உரிமை முழக்கமிட்டனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் குமாரபாளையம் பகுதியில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் உயிரிழந்த 15 நபர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நினைவு கூறும் வகையிலும் மொழிப்போர் தியாகிகள் நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்த மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக மாணவர் அணி சார்பில், இன்று தீ பரவட்டும் என்ற கோஷத்தினை எழுப்பி மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாரக்கால் காடு பகுதியில் இருந்து மாநில மாணவரணி அமைப்பாளர் ராஜீவ் காந்தி தலைமையிலும், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் முன்னிலையிலும், ஊர்வலமாக புறப்பட்ட திமுகவினர், வழிநெடுகிலும் கோசமிட்டபடி நினைவுத்தூண் வந்தடைந்தனர். அங்கு மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செய்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கே எஸ் மூர்த்தி மாநில மாணவரணி துணைச் செயலாளர் வீரமணி குமாரபாளையம் தெற்கு நகர செயலாளர் ஞானசேகர் வடக்கு ஒன்றிய செயலாளர் நாச்சிமுத்து மாவட்ட மகளிர் அணி தொண்டர் அணி அமைப்பாளர் ராதிகா மற்றும் மாணவர் அணி, மகளிர் அணி, இளைஞரணி உள்ளிட்ட சார் பணிகள் சார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
Next Story