மோகனூர் அருகே பொங்கல் விளையாட்டு விழா! நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்!

மோகனூர் அருகே பொங்கல் விளையாட்டு விழா! நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்!
X
பொங்கல் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
மோகனூர் கிழக்கு ஒன்றியம், வெள்ளாளப்பட்டியில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இசை நாற்காலி போட்டியை துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.அதனை தொடர்ந்து அரூர் ஊராட்சி சுக்காம்பட்டியலிலும் விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்ட பொருளாளர் சசிகுமார், ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட விவசாய அணி செயலாளர் திசா கமிட்டி உறுப்பினருமான ரவிச்சந்திரன், மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார், கிளை செயலாளர் முருகேசன், குமாரசாமி, சரவணன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story