தென்காசி மாவட்ட முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு கூட்டம்

முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு கூட்டம்
கடையநல்லூரில் தென்காசி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் நடந்தது கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அப்துல் அஜீஸ் தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் செய்யது பட்டாணி வரவேற்றார் மாவட்ட பொருளாளர் செய்யது மசூது ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் மைதீன் ஹஜ்ரத், செய்யது இப்ராஹிம், முகமது இஸ்மாயில் மாவட்ட முதன்மை துணை தலைவர் அப்துல் வஹாப் மாவட்ட துணைத் தலைவர் முகமது கலீல் மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்.ஏ‌.ஹைதர் அலி கடையநல்லூர் நகர தலைவர் நல்லாசிரியர் செய்யது மசூது உள்ளிட்டோர் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு எதிர்வரும் ஜனவரி 24,25 தேதிகளில் தமிழ்நாடு அரசு சார்பில் தகைசால் விருது பெற்று முதல் முறையாக தென்காசி மாவட்டத்திற்கு வருகைதரும் தேசிய தலைவர் அவர்களுக்கும் மாநில பொதுச் செயலாளருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்க தென்காசி மாவட்ட நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு. தீர்மானம் 1 எதிர்வரும் ஜனவரி 24 ம் தேதி கடையநல்லூர் பைசூல் அன்வார் அரபிக் கல்லூரி பொன்விழா மற்றும் ஜனவரி 25 ம் தேதி தென்காசி மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் அ.முகம்மது ஜாவித் இல்லத் திருமணம் நடைபெற உள்ளது இந்நிகழ்வில் தேசிய தலைவர் தகைசால் தமிழர் பேராசிரியர் கே.எம் காதர் மொய்தீன் அவர்கள் தென்காசி மாவட்டத்திற்க்கு வருகை தருகிறார் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது. தீர்மானம் 2 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தென்காசி மாவட்ட நிர்வாகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஜனவரி 24 ம் தேதி காலை 11 மணியளவில் தேசியத் தலைவர் பேராசிரியர் அவர்கள் பொற்கரங்களால் கட்டுமான பணியை துவக்கி வைக்க இக்கூட்டம் முடிவு செய்கிறது. தீர்மானம் 3 எதிர்வரும் ஜனவரி 28ஆம் தேதி கும்பகோணம் தாராசுரம் பைபாஸ் அருகே நடைபெற உள்ள முஸ்லிம் லீக் மாநில மஹல்லா ஜமாத் மாநாட்டில் தென்காசி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தனி வாகனம் மற்றும் தொடர்வண்டி மூலமாக செல்ல முடிவு செய்யப்பட்டது. தீர்மானம் 4 மாநாட்டு செல்வதற்கான அழைப்பு பணி மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை மாவட்ட மேலிட குழுக்களாக தென்காசி தொகுதிக்கு மாவட்ட செயலாளர் செய்யது பட்டாணி கடையநல்லூர் தொகுதிக்கு மாவட்ட பொருளாளர் செய்யது மசூது மாவட்டத் துணைச் செயலாளர் ஹைதர் அலி கடையநல்லூர் நகர தலைவர் நல்லாசிரியர் செய்யது மசூது தொகுதி செயலாளர் முத்து முகமது அன்சாரி வாசுதேவநல்லூர் தொகுதிக்கு மாவட்ட முதன்மை துணைத் தலைவர் அப்துல் வஹாப் சங்கரன்கோவில் தொகுதிக்கு மாநில கவுரவ ஆலோசகர் பாம்பு கோவில் சந்தை செய்யது இப்ராஹிம் ஆலங்குளம் தொகுதிக்கு முதலியாபட்டி அப்துல் காதர் உள்ளிட்டோர் நியமிக்க படுகின்றனர். நிறைவாக மாவட்ட அரசு காஜி ஏ.ஒய்.மைதீன் ஹஜ்ரத் துஆ செய்து கூட்டம் நிறைவு பெற்றது.
Next Story