மோகனூர் காவிரி ஆற்றில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

X
Namakkal King 24x7 |18 Jan 2026 12:49 PM ISTஜனவரி -18 ஞாயிற்றுக்கிழமை தை அமாவாசையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றின் கரையில் ஏராளமானோர் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.
தை அமாவாசையை முன்னிட்டு மோகனூர் காவிரி கரையில் ஏராளனமான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபாடு செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசைகளில் முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தர்பணம் செய்தால் நன்மை தரும் என இந்துக்களால் நம்பப்படுகிறது. இந்நிலையில் ஜனவரி -18 ஞாயிற்றுக்கிழமை தை அமாவாசையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றின் கரையில் ஏராளமானோர் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபாடு நடத்தினர். அதிகாலையிலே காவிரி ஆற்றில் புனித நீராடி, வேத விற்பன்னர்கள் மூலம் பலிகர்மம் பூஜை செய்தனர். வாழை இழையில், பச்சரிசி,பூ, தர்ப்பை, பச்சரிசி,எள் போன்றவை வைத்து பூஜை செய்து அதனை காவிரி ஆற்றில் கரைத்து புனித நீராடினர். இதில் நாமக்கல், மோகனூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் வழிபாடு நடத்தினர்.மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், பாதுகாப்பு பணியில், காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
Next Story
