உடல்நிலை சரியில்லாமல் இறந்த தவெக தீவிர, கட்சி தொண்டர்.
NAMAKKAL KING 24X7 B |18 Jan 2026 8:00 PM ISTஇல்லம் தேடி சென்று தொண்டனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை செய்த தவெக நிர்வாகிகள்.
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே புஞ்சை புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி, வனிதா தம்பதியினரின் மகன் பரணிதரன் ( வயது 21) , இவர் தனியார் கல்லூரியில் 3 ம் ஆண்டு படித்து வந்தார். தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து கட்சிப் பணியை தீவிரமாக மேற்கொண்டு வந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது இறப்பு கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியதையடுத்து நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் தமிழக வெற்றிக்கழகத்தினர் பரணிதரனின் இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் பரணிதரனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம், வீட்டிற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள் வழங்கினர் மேலும் பரணிதரனின் தங்கையான பிரியதர்ஷினியின் படிப்பு செலவை தமிழக வெற்றிக்கழகத்தின் நாமக்கல் மேற்கு மாவட்டம் ஏற்பதாக மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் உட்பட நிர்வாகிகள் உறுதி அளித்தனர்
Next Story





