பெரியஅய்யம்பாளையம் ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமராயர் ஆலயத்தில் மகர உற்சவ திருவிழா. ஆரணி எம்எல்ஏ பங்கேற்பு.

X
Arani King 24x7 |19 Jan 2026 7:19 AM ISTஆரணி அடுத்த பெரியஅய்யம்பாளையம் கிராமத்தில் சுமார் 200 அடி மலை உச்சியில் எழுந்தருளியுள்ள ஊமைக்கு வாய் கொடுத்த அருள்மிகு உத்தமராயப் பெருமாள் கோவிலில் தை அமாவாசை முன்னிட்டு மகர உற்சவ விழா நடைபெற்றது.
ஆரணி அடுத்த பெரியஅய்யம்பாளையம் கிராமத்தில் சுமார் 200 அடி மலை உச்சியில் எழுந்தருளியுள்ள ஊமைக்கு வாய் கொடுத்த அருள்மிகு உத்தமராயப் பெருமாள் கோவிலில் தை அமாவாசை முன்னிட்டு மகர உற்சவ விழா நடைபெற்றது. இதில் ஸ்ரீதேவி பூதேவி சமேத அருள்மிகு உத்தமராயப் பெருமாள் உற்ச்வ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. இதில் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும் இதில் ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.இராமச்சந்திரன், நகரசெயலாளர் அசோக்குமார், ஒன்றிய துணைசெயலாலர் ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story
