பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தில் பேரூராட்சி நிர்வாகத்தால் போட்ட தார் சாலையை தனிநபர் அகற்றியதால் அப்பகுதி மக்கள் பயணிக்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்

X
Krishnarayapuram King 24x7 |19 Jan 2026 4:32 PM ISTஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்டம் கிழக்குக்களம் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவ்வழியாக புதுப்பட்டிக்கு செல்லும் சாலையை பொதுமக்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்காக தார் சாலை போடப்பட்டுள்ளது. இதில் தனிநபர் ஒருவர் தனது பட்டா நிலத்தில் தார் சாலை செல்வதாக கூறி சுமார் 15 மீட்டர் அளவில் பேரூராட்சி சார்பில் போடப்பட்ட தார் சாலையை சேதப்படுத்தி அகற்றியுள்ளனர். இதனால் அப்பகுதியில் வசியக்கூடிய பொதுமக்கள் செல்வதற்கு பெரிதும் சிரமத்தை காலாகி வருகின்றனர். ஆகையால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
