திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்வி நிறுவனத்தில் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி துவக்க விழாஇந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்து கொண்டார்
Tiruchengode King 24x7 |19 Jan 2026 5:05 PM ISTதிருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்வி நிறுவனத்தில் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி துவக்க விழாவில் கலந்து கொண்டு அகாடமியை திறந்து வைத்து ஜெர்சியை அறிமுகம் செய்து வைத்து பயிற்சி விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்
இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் அமைப்புகள் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சூப்பர் கிங்ஸ் அகாடமி கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களில் புதிய கிரிக்கெட் அகாடமி தொடங்கியுள்ளது. இதன் தொடக்க விழா இன்று கே எஸ் ஆர் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் பன்னிரண்டாவது நகரமாக திருச்செங்கோட்டில் சூப்பர் கிங்ஸ் அகடமி துவக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் மட்டுமல்லாது உலக அளவில் சூப்பர் கிங்ஸ் அகாடமிகள் திறக்கப்பட்டுள்ளது. இங்கு பயிற்சி பெறும் இடம், கிரிக்கெட் வீரர்களுக்கு உலக தரமான உட்கட்டமைப்பு வசதிகள், திறமை மிக்க பயிற்றுநர்கள், முறையான வீரர்கள் வளர்ச்சி திட்டங்கள் வழங்கப்படும்.டர்ப்பிட்ச்சுகள் அஸ்ட்ரோ டர்ப் பிட்ச்சுகள் மேட்டிங் பிட்ச்சுகள் மின்விளக்கு மைதானம், பந்து வீச்சு எந்திரம் ஆகியவை அமைக்கப் பட்டுள்ளது. இந்தபயிற்சி மைதானத்தை இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் திறந்து வைத்தார். தொடர்ந்து மாணவர்களுடன் வலைப் பயிற்சியில் ஈடுபட்டார்.துவக்க விழா நிகழ்ச்சிக்கு கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் சச்சின் தலைமை வகித்தார்.சூப்பர் கிங்ஸ் அகாடமி நிர்வாகி லூயிஸ் மரியனோ அனைவரையும் வரவேற்றார் கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களின் அட்மின் இயக்குனர் மோகன் நாமக்கல்மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் சண்முகசுந்தரம் செயலாளர் கோகுலநாதன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இயக்குனர் செல்வமணி சூப்பர் கிங்ஸ் நிர்வாகி ராஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிறப்பு அழைப்பாளராக இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்துகொண்டு கிரிக்கெட் அகாடமியை துவக்கி வைத்தும் மற்றும் விளையாட்டு பயிற்சி மைதானத்தை திறந்து வைத்தும். கே எஸ் ஆர் கல்வி நிறுவனத்தில் தொடங்கப் படும் அகாடமிக்கான ஜெர்சியை அறிமுகம் செய்து வைத்தும் பேசியபோது கூறியதாவது வாழ்க்கையில் வெற்றி தோல்வி ஏற்றம்இரக்கம் வரத்தான் செய்யும் இதை இரண்டையும் சமமாக பாவிக்கும் மனோபாவத்தை விளையாட்டு பெற்றுத் தரும் எந்தத் துறையை தேர்ந்தெடுத்தாலும் உண்மையாக உழைத்தால் அதில் உறுதியாக வெற்றி பெற முடியும் கடும் உழைப்புதான் வெற்றியைத் தரும் 20 வயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன் எங்கு விளையாடினாலும் ஒரு வழிகாட்டி தேவை அப்படி என்னை வழிகாட்டி சிட்டியில் விளையாட வைத்தனர். அதன் பிறகு தான் நான் டிவிஷன் லீக் விளையாண்டேன். அங்கு திறமையாக விளையாண்டால் தமிழ்நாடு அணிக்கான வாய்ப்பு கிடைக்கும். சிறப்பாக விளையாடினால் தான் யாருக்காக இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும். எந்த துறையாக இருந்தாலும் கடினமாக உழைக்க வேண்டும். நல்ல பயிற்சி மேற்கொள்ள வேண்டும் எனக் கூறினார். தொடர்ந்து மாணவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய போது நடராஜன் கூறியதாவது விராட் கோலி போன்ற பெரிய வீரர்களுக்கு பந்து வீசும் போது நான் என் மீது நம்பிக்கை வைத்து என்னால் என்ன இயலுமோ அதைச் செய்து தான் பந்து வீசுவேன தவிர எதிரில் யார் நிற்கிறார்கள் என அச்சம் கொள்ள மாட்டேன் என் மீது நம்பிக்கை வைத்து நான் விளையாடுவேன் அது போல் உங்கள் மீது நம்பிக்கை வைத்து உங்கள் திறமை மீது நம்பிக்கை வைத்தால் நீங்களும் வெற்றி பெறுவீர்கள். எனக்கு பேட்டிங் அவ்வளவாக வராது நான் முழுமையாக பந்து வீச்சில் கவனம் செலுத்தியதால் பந்துவீச்சாளராகத்தான் என்னை பயிற்றுவித்துக் கொண்டேன். பேட்டிங் என்றால் எனக்கு சற்று பயம்தான். தோல்விகள் நிறைய கற்றுத் தரும் எதுவும் வராது என நினைக்காமல் நம்மால் முடியும் என எதையும் மனம் வைத்துக் கற்றுக் கொண்டால் எதையும் கற்றுக் கொள்ள முடியும். படிக்கிற காலத்தில் எனக்கு படிப்பு வராது சராசரி மாணவன் தான்.ஆனால் எனக்குத் தெரிந்தது கிரிக்கெட் விளையாட்டு மட்டும்தான் அதில் முழு கவனம் செலுத்தினேன் இந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறேன். நீங்களும் உங்களுக்குத் தெரிந்த ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் தெளிவான முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும் நமது கிராமப்புற மாணவர்களுக்கு அனைத்து திறமைகள் இருந்தும் கம்யூனிகேஷன் ஸ்கில் என்கிற கேள்வி கேட்கும் திறன் இல்லாததால் கற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. எந்த வேலையாக இருந்தாலும் பேசும் திறன் இருந்தால் தான் கேள்வி கேட்கும் திறன் இருந்தால் தான் வெற்றி பெற முடியும். தேவையானதை பெற வேண்டும் என நினைக்கிறோமே தவிர அதற்காக கடுமையாக உழைப்பதில்லை கடமைக்காக செய்யாமல் கடுமையாக உழைத்து திறமையை வளர்த்துக் கொண்டால் நிச்சயம் வெற்றி பெறலாம். இன்சுவிங் பந்து வீச எனக்கு தெரியாமல் இருந்தது. தெரியவில்லையே என தளர்ந்து விடாமல் கற்றுக் கொண்டேன் பந்து வீசினேன் தினசரி நம்மை நாம் அப்டேட் செய்து கொண்டால் தான் வெற்றி பெற முடியும் என கூறினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிரிக்கெட் வீரர் நடராஜன் கூறியதாவது அகாடமியில் பல்வேறுமுறையில் மாணவர்கள் பயிற்சி பெற கற்றுத் தரப்படுகிறது மின்விளக்கு வெளிச்சத்தில் விளையாட மேட்டில் விளையாடி பழகிய மாணவர்கள் பிட்ச்சில் விளையாட பந்து வீசும் எந்திரத்தின் மூலம் பயிற்சி பெற என பல்வேறு வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது வாய்ப்புகள் நிறைய இருக்கிறது பயன்படுத்திக் கொள்வது நம் கையில் தான் இருக்கிறது. நாங்கள் வழிகாட்டிகளாக இருக்கத்தான் இதுபோன்ற அகாடமி களை தொடங்கியுள்ளோம் 200 சதவீதம் உண்மையாக பயிற்சி அளிக்க உள்ளோம் எங்களைப் பயன்படுத்திக் கொண்டு உங்கள் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் நான் வைத்திருக்கிற பயிற்சி மையத்தில் 60 மாணவர்கள் பயின்று வருகிறார்கள் நானும் அரசு பள்ளியில் படித்தவன் தான் அரசு பள்ளி தனியார் பள்ளி என்ற எந்த வித்தியாசமும் இல்லை திறமை இருந்தால் எப்பொழுதும் முன்னுக்கு வரலாம் கிராமப்புற மாணவர்களுக்கு நிறைய திறமை இருக்கிறது சரியான வழிகாட்டிகள் தேவைப்படுகிறார்கள் அதனால் தான் நாங்கள் இந்த அகாடமியை தொடங்கி உள்ளோம் நான் என் தனிப்பட்ட விளையாட்டில் ஐபிஎல்லில் கவனம் செலுத்தி வருகிறேன் ஒரு வருடம் சிறப்பாக விளையாடினால் அடுத்த வருடம் காயத்தில் விளையாட முடியாமல் போகிறது அதனால் வருங்காலத்தில் ஐபிஎல் விளையாட நிறைய பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறேன் எனக் கூறினார்.
Next Story


