ஆன்லைன் டோக்கனை ரத்து செய்யக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஜல்லிக்கட்டு விழா குழுவினரை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்ததால் பரபரப்பு.
NAMAKKAL KING 24X7 B |19 Jan 2026 8:13 PM ISTசாலைப்பாளையத்தில் வரும் 27 ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி ஆன்லைன் டோக்கனுக்கு விழா குழுவினர் கடும் எதிர்ப்பு
நாமக்கல் மாவட்டம் சாலைபாளையத்தில் வரும் 27 ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதால் அதற்கான ஏற்பாடுகளை போட்டி நடத்தும் விழா ஒருக்கிணைப்பாளர் ராஜா தலைமையில் விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஆன்லைன் முறையில் ரூ.20 கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்யக்கோரி ஜல்லிக்கட்டு போட்டி விழாக்குழு ஒருக்கிணைப்பாளர் ராஜா தலைமையில் விழா குழுவினர், இளைஞர்கள், மாடு உரிமையாளர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தடையை மீறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்யக்கோரி ஜல்லிக்கட்டு விழா குழுவினர் தடையை மீறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
Next Story



