ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினரால் பரபரப்பு...

X
Rasipuram King 24x7 |19 Jan 2026 9:15 PM ISTராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினரால் பரபரப்பு...
ஒன்றிய செயலாளர் பதவி காலம் முடிந்தும், ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இடம் ஒதுக்கியதை கண்டித்தும், உடனடியாக அவரை வெளியேற்றக் கோரி ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினரால் பரபரப்பு... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றிய திமுக கழக செயலாளராக ஜெகநாதன் என்பவர் உள்ளார். ராசிபுரம் ஒன்றிய செயலாளராக பதவி வகித்த ஜெகநாதன் தனது பதவிக்காலம் முடிந்தும் இவருக்கு ராசிபுரம் ஒன்றிய அலுவலகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிமுக மற்றும் பாஜக ,பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஜெகநாதனை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து வெளியேற்ற கோரி ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜெகநாதன் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வரும் மற்ற கட்சியினரை கேள்வி கேட்பதாகவும் தெரிவித்த அதிமுக கூட்டணி கட்சியினர் அவருக்கு இடம் ஒதுக்கினால் மற்ற கட்சியினருக்கும் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக்கோரி ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
