மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தம்
Komarapalayam King 24x7 |19 Jan 2026 9:20 PM ISTகுமாரபாளையம் பகுதியில் மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டது.
குமாரபாளையம் அருகே மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்கால் உள்ளது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம், நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது அறுவடையும் முடியும் நிலையில் உள்ளதால், மேட்டூரில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. ஆறு மாத காலமாக தண்ணீர் வந்ததால், குமாரபாளையம், தட்டான்குட்டை ஊராட்சி, குப்பாண்டபாளையம் ஊராட்சி, சமயசங்கிலி ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் `10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் நெல் பயிரிட்டு விவசாயிகள் பயன் பெற்றனர்.
Next Story


