நகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா

நகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில்  முப்பெரும் விழா
X
குமாரபாளையம் நகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.
குமாரபாளையம் புத்தர் தெரு அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆண்டுவிழா, விளையாட்டு விழா, பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா தலைமை ஆசிரியர் (பொ) நாகராஜன் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக பி.டி.ஏ.தலைவர் தங்கவேல், துணை தலைவர் வாசுதேவன், உள்பட பலர் பங்கேற்றனர். இதில் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்த மாணவர்கள் கவுரவப்படுத்தப்பட்டனர். பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், ஆணையாளர் ரமேஷ் உள்பட பலர் வாழ்த்தி பேசினர்.
Next Story