தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்.
X
காவேரிப்பாக்கம்,ஜன.20: ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி பகுதியில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், விவசாயிகள் விடுதலை செய்ய கோரி, ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் போராட்டம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம். காவேரிப்பாக்கம்,ஜன.20: ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி பகுதியில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், விவசாயிகள் விடுதலை செய்ய கோரி, ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் போராட்டம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் வஜ்ரவேல் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி உள்ளிட்ட விவசாயிகள் விடுதலை செய்ய வலியுறுத்தி கோசங்கள் எழுப்பினர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் தனஞ்செழியன் நன்றி கூறினார்.
Next Story