வாகனத்தில் அடிபட்டு தேசிய பறவை இறப்பு

X
Komarapalayam King 24x7 |20 Jan 2026 8:53 PM ISTகுமாரபாளையத்தில் வாகனத்தில் அடிபட்டு தேசிய பறவை இறந்தது.
குமாரபாளையம் அருகே எடப்பாடி சாலை தனியார் ப்ராசசிங் மில் அருகே நேற்று மாலை 11:00 மணியளவில் தேசிய பறவை மயில் ஒன்று அவ்வழியாக சென்ற வாகனத்தில் அடிபட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனைக்கண்ட பொதுமக்கள் குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நேரில் சென்ற போலீசார் மயிலை கைப்பற்றினர். ஆனால் அது இறந்து விட்டது. உடனே போலீசார் வனத்துறையினருக்கு தகவல் தர, அவர்கள் நேரில் வந்து தேசிய பறவையான மயிலை பெற்று, அதற்கு தேசியக்கொடி போர்த்தி, மரியாதை செலுத்தினர். அதன் பின் அதனை எடுத்துச் சென்று வனப்பகுதியில் நல்லடக்கம் செய்தனர். இந்த மயிலுக்கு பொதுமக்கள் பலரும் வணங்கி மரியாதை செலுத்தினர். முருக பக்தர்கள் ஏராளமானோர் இப்பகுதியில் இருப்பதாலும், பழனி பாதயாத்திரை சீசன் என்பதாலும், முருகனின் வாகனம் ,மயில் என்பதாலும், முருக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மயிலுக்கு பெருமளவில் மரியாதை செலுத்தினர்.
Next Story
