அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
X
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் இரண்டாம் நாள் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடந்தது.
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் இரண்டாம் நாள் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் முதல்வர் (பொ) சரவணாதேவி தலைமையில் நடந்தது திட்ட அலுவலர் ரமேஷ் குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் ரிஸ்வானா பேகம் பங்கேற்று பேசினார். இவர் பேசுகையில், தடை செய்யப்பட்ட நெகிழி பயன்பாட்டை தவிர்ப்பது மற்றும் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தும் , மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடைமுறை வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார். இதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் அனைவருக்கும் மஞ்சள் பை வழங்கப்பட்டது. இது நெகிழி பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் அமைந்தது.வேதியியல் துறைத்தலைவர் மகாலிங்கம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு சுற்றுச்சூழல், தூய்மை மற்றும் சமூக பொறுப்பு குறித்து பேசினார். கணித துறை விரிவுரையாளர் அருள் சின்னப்பன் நன்றி கூறினார். வாசுகி நகர் அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளி வளாகம் முழுதும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
Next Story