கள்ளுக்கான தடையை நிரந்தரமாக நீக்க வேண்டும் தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை.

X
Paramathi Velur King 24x7 |21 Jan 2026 6:39 PM ISTதமிழ்நாட்டில் கள்ளுக்கான தடையை நிரந்தரமாக நீக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமத்தி வேலூர், ஜன.21: பரமத்தியில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேலுச்சாமி பரமத்தியில் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார். பதில் கூறியதாவது: தமிழக விவசாயிகள் நிலத்தில் தென்னை மற்றும் பனைமரத்தில் இருந்து எடுக்கப்படும் கள்ளுக்கு நிரந்தரமாரந்தரமாக உள்ள தடையை நீக்க கோரி உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் விவசாயிகள் சங்கம் சார்பாக பலமுறை தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தது. தமிழ்நாடு அரசு விவசாயிகளின் கோரிக்கையை மறுத்து விட்டு மதுவுக்கு தான் இன்று முக்கியத்துவம் கொடுக்கிறது. டாஸ்மாக் மதுக்கடை தமிழ்நாட்டில் அதிகப்படியாக திறந்து விட்டு அதற்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டு இயற்கையான பானம் தென்னை மற்றும் பனை மரத்திலிருந்து இறக்கப்படும் நோய் பிணியை போக்கக்கூடிய இந்த பானத்திற்கு தடையை இன்னும் நீக்க வில்லை பக்கத்து மாநிலங்களான கேரளா, ஆந்திரா,தெலுங்கானா,கர்நாட கா ஆகிய மாநிலத்தில் கள் இரக்க தடையில்லை தமிழ்நாட்டில் மட்டும் தான் கள்ளுக்கு தடை இந்த தடையை நீக்க கோரி அரசுக்கு பலமுறை கோரி க்கை விடுத்தும் செவி சாய்க்கவில்லை. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கள்ளுக்கு உண்டான தடை நீக்குகிறோம் எனக் எந்த கட்சிகூறுகிறதோ அந்த கட்சிக்கு தமிழக விவசாயிகள் சங்கம் முழு ஆதரவு கொடுக்கும் என தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பின் போது இளம் விவசாயிகள் சங்க மாநில தலைவர் சௌந்தரராஜன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளவரசன் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.
Next Story
