ராமநாதபுரம் தன்னைத் தாக்கிய மகன் மீது தந்தை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார்

X
Ramanathapuram King 24x7 |21 Jan 2026 7:58 PM ISTதந்தையை தாக்கிய மகன் மீது நடவடிக்கைஎடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முதியவர் புகார்
ராமநாதபுரம் மாவட்டம்வயதான தந்தையை தாக்கிய மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கணக்கு அப்புச்சாமி தெருவை சேர்ந்த சிவனாண்டி(88) மனைவி இறந்த 15 ஆண்டுகள் கடந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து வருகிறார். இவரது மூன்றாவது மகன் ரமேஷ் மற்றும் அவரது மனைவி சுந்தரி மற்றும் குழந்தையுடன் இருந்து வருகின்றனர். தன்னை வீட்டு விட்டு விரட்டும் வகையில் அடித்து துண்புருத்தல் செய்து வருவதாகவும். காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மகன் அச்சுருத்தல் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
Next Story
