இராணிப்பேட்டை மாவட்டம் அடுத்த நெமிலி ஊராட்சி ஒன்றியம் கீழாந்துறை ஊராட்சி
Ranipet King 24x7 |21 Jan 2026 8:31 PM ISTஇந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் உட்பட ஏழை எளிய மக்கள் 100 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஒன்றிய பெருந்தலைவர் வழங்கினார். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இராணிப்பேட்டை மாவட்டம் அடுத்த நெமிலி ஊராட்சி ஒன்றியம் கீழாந்துறை ஊராட்சி நியாய விலைக்கடை கட்டிடம், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், கண்காணிப்பு கேமராக்கள் திறப்பு விழா இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழாந்துறை ஊராட்சியில் மூன்று திட்டங்களுக்கான திறப்பு விழா, ஊராட்சி மன்ற தலைவர் மின்னல் ஒளி அம்பேத்கராஜ் தலைமையில் நடைபெற்றது. ரூபாய் 22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலை கடை கட்டிடம் மற்றும் புதியதாக கீழாந்துரை கிராமத்தில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவற்றிற்கான திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் வடிவேலு கலந்துகொண்டு மேற்கண்ட 3 அரசு நலத்திட்டங்களை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் உட்பட ஏழை எளிய மக்கள் 100 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஒன்றிய பெருந்தலைவர் வழங்கினார். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலைஞர்தாசன், அம்பேத்ராஜ், தயாளன், சுகுமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாபு, பெருமாள், கருணாகரன், அருள், ஊராட்சி செயலாளர் தேவேந்திரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story


