துணி காயப்போடும் தகராறில் மூவர் கைது,ஒருவர் தலைமறைவு

X
Komarapalayam King 24x7 |21 Jan 2026 10:31 PM ISTகுமாரபாளையத்தில் துணி காயப்போடும் தகராறில் ஆண்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். ஒரு பெண் தலைமறைவானார்.,
குமாரபாளையம் பூலக்காடு பகுதியில் வசிப்பவர் தனபால், 30. கூலி. இவரது அருகில் வசிக்கும் ரத்தினவேல், கார்த்திக், பிரபு, விஜயலட்சுமி ஆகிய நால்வர், தனபால் செல்லும் வழியில் கயிறு கட்டி துணி காயப்போட்டு வந்தனர். இதனைக் கேட்ட தனபால் மீது, நால்வரும் சேர்ந்து அடித்து, உதைத்து உள்ளதுடன், இனி இது பற்றி கேட்டால் கொலை செய்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பலத்த அடிபட்ட தனபால், குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தனபால் குமாரபாளையம் போலீசில் புகார் செய்ய, போலீசார் நேரில் சென்று, ரத்தினவேல், கார்த்திக், பிரபு ஆகிய மூவரை கைது செய்தனர். விஜயலட்சுமி தலைமறைவானார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து, தலைமறைவான பெண்ணை தேடி வருகின்றனர்.
Next Story
