குளித்தலையில் விதைகள் அறக்கட்டளை மற்றும் குளித்தலை காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி
Kulithalai King 24x7 |22 Jan 2026 7:19 AM IST37 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு பேரணி
கரூர் மாவட்டம் குளித்தலை சட்ட ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறை விதைகள் அறக்கட்டளை சார்பில் 37 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. குளித்தலை காந்தி சிலை முதல் சுங்க கேட் வரை முசிறி எம் ஐ டி கல்லூரி, துறையூர் இமயம் வேளாண் கல்லூரி மற்றும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகை ஏந்தி சென்றனர். இந்நிகழ்வில் விதைகள் அறக்கட்டளை நிர்வாகி சந்துரு பிரசன்னா மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அசோகன் உள்ளிட்ட காவலர்கள், போக்குவரத்து காவலர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்
Next Story



