உதகை முத்தநாடு மந்து பகுதியில் தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய கோவிலில், கூரை வேயும் நிகழ்ச்சி இன்று துவங்கியது.
Udhagamandalam King 24x7 |22 Jan 2026 8:44 AM ISTஇலங்கை, நார்வே, லண்டன் உள்ளிட்ட ஐந்து நாடுகளில் உள்ள தமிழர்கள் இருந்து தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரியம் கலாச்சாரம் குறித்து கேட்டறிந்தனர்...
உதகை முத்தநாடு மந்து பகுதியில் தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய கோவிலில், கூரை வேயும் நிகழ்ச்சி இன்று துவங்கியது... இரண்டு மாதங்களுக்கு தோடர் பழங்குடியினர் மக்கள் விரதம் இருந்து வன பகுதிகளில் தங்கி இருந்து சேகரித்து வரும் மூங்கில், புற்கள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு கூரை வேயும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது ........ இந்நிகழ்ச்சியை இலங்கை, நார்வே, லண்டன் உள்ளிட்ட ஐந்து நாடுகளில் உள்ள தமிழர்கள் இருந்து தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரியம் கலாச்சாரம் குறித்து கேட்டறிந்தனர்........ நீலகிரி மாவட்டத்தில், தோடர், குரும்பர், கோத்தர், காட்டு நாயக்கர், இருளர் மற்றும் பணியர் ஆகிய, 6 வகையான பண்டைய பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அதில், தோடர் இன மக்கள் வசிக்கும் பகுதி மந்து என்று அழைக்கப்படுகிறது. இவர்கள் மாவட்டத்தின் பல பகுதிகளில், 67 மந்துகளில் வசிக்கின்றனர். இவற்றின் தலைமை மந்தாக, தலைகுந்தா பகுதியில் உள்ள முத்தநாடு மந்து உள்ளது. இந்நிலையில், முத்தநாடு மந்து பகுதியில் உள்ள பெரிய கோவிலான மூன்போ தேக்கிசியம்மன் பழமையான கோவில் உள்ளது. இதன் கூரையை, 19 ஆண்டுகளுக்கு பின் கூரை வேயும் நிகழ்ச்சி இன்று துவங்கியது. கூரைக்கான பொருட்களை வனப்பகுதிகளில் இருந்து சேகரிப்பதற்காக தோடர் பழங்குடியின ஆண்கள் இரண்டு மாதங்கள் விரதம் இருந்து வனப்பகுதியில் தங்கி இருந்து கூரைக்காண மூங்கில், பிரம்பு மற்றும் அவில் எனப்படும் ஒருவகையான புற்களை சேகரித்து வந்து கோவிலின் மேற்கூரையை வேயும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பழங்குடியின ஆண்கள் மட்டும் கோவில் முன்பு கூடி சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டு மேற்கூரையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனை தமிழர்கள் வாழும் இலங்கை, நார்வே, லண்டன், இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் உள்ள நுண்களை பொறியியல் கல்லூரியில் இருந்து பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று தோடர், பழங்குடியின மக்களின் கலாச்சாரம் பாரம்பரியம் மற்றும் அவர்களின் வாழ்வியல் குறித்து கேட்டறிந்தனர்.
Next Story


