கொங்குநாடு கல்வி நிறுவனங்களில் விளையாட்டு விழாக்கொண்டாட்டம் .

வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்திலிருந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு, மாநில மற்றும் மாவட்ட அளவில் சாதனை புரிந்த மாணவர்களால் மேளதாளம் முழங்க பள்ளிக்குக் கொண்டு வரப்பட்டது. சிறப்பு விருந்தினராக தனியார் பள்ளிகளின் மாவட்டக் கல்வி அலுவலர் ஆ.ஜோதி கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார். தேசியக்கொடி, ஒலிம்பிக் கொடி, பள்ளியின் கொடி முதலியவை ஏற்றப்பட்டு பட்டொளி வீசி பறந்தன.பள்ளியின் பதாகை அடங்கிய வண்ண பலூன்களும், சமாதானத்தின் அடையாளமாகத் திகழும் வெண்புறாக்களும் வானில் பறக்கவிடப்பட்டன. இரு சக்கர வாகனங்களின் சாகச அணிவகுப்பு, மாணவர் படைகளின் அணிவகுப்பு உள்ளிட்டவற்றை ஏற்றுக்கொண்ட சிறப்பு விருந்தினர் அவர்கள், தெளிவான நோக்கங்களும், அதை அடையும் முறையான வழிமுறைகளும் தேவை என அறிவுரை வழங்கினார். தொடர் நிகழ்வாக கராத்தே மற்றும்சிலம்பம் உள்ளிட்ட தற்காப்புக் கலைகளில் மாணவர்கள் தம் திறனை வெளிப்படுத்தினர்.மேலும் விளையாட்டுப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.இவ்விழாவில் கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜா, தாளாளர் முனைவர். .ராஜன், பொருளாளர் ராஜராஜன், மெட்ரிக் பள்ளியின் ஆலோசகர்முனைவர் ராஜேந்திரன், செயலாளர் சிங்காரவேலு மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர் ளு.ளு.சாரதா, சிபிஎஸ்இ சீனியர் செகன்டரி பள்ளி முதல்வர் யசோதா, சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் காயத்ரி, கல்வியியல் கல்லூரி முதல்வர் சாந்தி மற்றும் இருபால் ஆசிரியர், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
