குடிநீர் வராதால் பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் வராதால் பொதுமக்கள் சாலை மறியல்
X
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் 19-வது வார்டு பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல்
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் 19-வது வார்டு பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சரிவர குடிநீர் கிடைக்கவில்லை என்று ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள், இதனை தொடர்ந்து 19 வது வார்டு பொதுமக்கள் குடிநீர் 10 நாட்களுக்கு மேலாக கிடைக்கவில்லை என்று காலிகுடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
Next Story