குளித்தலையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
Kulithalai King 24x7 |23 Jan 2026 8:25 PM ISTஅரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பங்கேற்பு
குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி தேர்தல் பிரிவு சிறப்பு தாசில்தார் வெங்கடேசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. முன்னதாக மாணவர்களிடையே தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துக் கூறியும் மாணவர்கள் ஜனநாயக கடமை ஆற்றுவதன் அவசியம் குறித்த கருத்துக்களை தேர்தல் பிரிவு துணை தாசில்தார் ஜெயவேல் காந்தன் கூறினார். இதனைத் தொடர்ந்து தாசில்தார் வெங்கடேசன் கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியானது, சத்தியமங்கலம் பேருந்து நிலையம், கடைவீதி மற்றும் முருகன் கோவில் வளாகம் என முக்கிய வீதிகள் வழியாக சென்று மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பதாகை ஏந்தி கொண்டு முழக்கங்களை எழுப்பி கொண்டு பேரணியாக சென்றனர். இதில் பேராசிரியர் வைரமூர்த்தி மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை நாட்டுநலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விலங்கியல் துறை தலைவர் பாபுநாத். வணிக நிர்வாகவியல் துறை தலைவர் வெங்கடேசன் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்
Next Story




