ராமநாதபுரம் புதிய தலைவருக்கு உற்சாக வரவேற்பு
Ramanathapuram King 24x7 |24 Jan 2026 8:04 AM ISTகாங்கிரஸ் கட்சி புதிய தலைவருக்கு நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.
ராமநாதபுரம் மாவட்டம்அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையால் தமிழ்நாடு முழுவதும் புதிய மாவட்ட தலைவர்களை அறிவித்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக ராமநாதபுரம் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினராகவும், மாவட்ட பொருளாளராகவும், நகர்மன்ற உறுப்பினராகவும் இருந்துவரும் ராஜாராம் பாண்டியன் அவர்களை புதிய மாவட்ட தலைவராக நியமித்த நிலையில் அவர் சென்னைக்கு சென்று மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று, முக்கிய தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று ராமநாதபுரம் வருகை தந்த புதிய மாவட்ட தலைவர் ராஜாராம் பாண்டியனுக்கு ராமநாதபுரம் தாலுகா நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலக வாயிலில் பட்டாசுகள் வடித்து இனிப்புகள் வழங்கி மாலை அணிவித்து பொன்னாடைகள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர், இதில் ராமநாதபுரம் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை, பேரூர் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தார்
Next Story



