தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

X
Tenkasi King 24x7 |24 Jan 2026 10:31 AM ISTதேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியம், தெற்கு மடத்தூர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.இந்திர வரவேற்புரை கூறினார். இந்நிகழ்வில் கடையம் வட்டாரக் கல்வி அலுவலர் திரு.மாரியப்பன் அவர்கள் கலந்து கொண்டு வாக்காளர்களின் கடமைகள் மற்றும் உரிமைகள் பற்றி சிறப்பு உரையாற்றினார். ஊர் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வாக்காளர் உறுதிமொழி ஏற்றனர். இடைநிலை ஆசிரியர் திரு.செல்வகனேசன் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை வாக்குச்சாவடி நிலை அலுவலர் திருமதி.ஸ்ரீ வள்ளி செய்திருந்தார்.
Next Story
