அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் புதிய தேர் நாளை வெள்ளோட்டம் விடப்பட உள்ள நிலையில்செய்யப்பட்ட இடத்திலிருந்து வெளியில் இழுக்கப்பட்டு வெள்ளோட்டம் விட தயாராக நிறுத்தப்பட்டது
Tiruchengode King 24x7 |24 Jan 2026 6:34 PM ISTஉலகப் புகழ் பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் புதிய தேர் நாளை வெள்ளோட்டம் விடப்பட உள்ள நிலையில் இரும்பு அச்சு இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டு செய்யப்பட்ட இடத்திலிருந்து வெளியில் இழுக்கப்பட்டு வெள்ளோட்டம் விட தயாராக நிறுத்தப்பட்டது நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிகலந்து கொண்டார்
பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக தேர் திருவிழாவின் போது அர்த்தநாரீஸ்வரர் வலம் வரசுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட தமிழகத்தின் நான்காவது பெரிய தேராக விளங்குகிற வைகாசி விசாகத் திருவிழா பெரிய தேர் புதிதாக அமைக்க முடிவு செய்யப்பட்டு2 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில்100 டன் இலுப்பை வேம்புஉள்ளிட்ட மரங்களைக் கொண்டு 23 அடி உயரம் 23 அடி அகலம்கொண்ட இரும்பு அச்சு உடன் கூடிய புதிய தேர் உருவாக்கும் பணிகடந்த 24 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பனிரெண்டாம் தேதி துவக்கப்பட்டு பணிகள் முடிவடைந்து புதிய தேர் உருவாகி இரும்பு அச்சு இரும்பு சக்கரம் பொருத்தப்பட்டு முழு வடிவம் பெற்ற நிலையில் நாளை வெள்ளோட்ட நிகழ்வு நடக்க உள்ளது இதற்கு முன்னதாக தேர்வு உருவாக்கப்பட்ட இடத்திலிருந்து வெள்ளோட்டம் துவங்க உள்ள இடத்திற்கு தேரை கொண்டு வரும் பணி இன்று நடைபெற்றது.டிராக்டர் பொக்லைன் ஜேசிபி எந்திரங்கள் உதவியுடன் தேர் வெளியே இழுக்கப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து,கோவில் செயல் அலுவலர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி காந்தன் தேர் திருவிழா குழு தலைவர் முத்து கணபதி,நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, திருவிழாகமிட்டி செயலாளர் பிஆர் டிநிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் பரந்தாமன்,ஊர் பிரமுகர் ராஜா ஆகியோர் உள்ளிட்ட நகரின் முக்கிய பிரமுகர்கள் நகர்மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Next Story


