நெமிலி ஊராட்சி ஒன்றியம். மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர்களுக்கான பயிற்சிக் கூட்டம் - ஒன்றியக்குழு தலைவர் பங்கேற்பு.

X
Ranipet King 24x7 |24 Jan 2026 7:05 PM ISTஇராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 47 ஊராட்சிகளில் நியமிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி மாற்றத்திறனாளி நியமன உறுப்பினர் ஆகியோர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிக் கூட்டம், நெமிலி ஊராட்சி ஒன்
நெமிலி ஊராட்சி ஒன்றியம். மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர்களுக்கான பயிற்சிக் கூட்டம் - ஒன்றியக்குழு தலைவர் பங்கேற்பு. இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 47 ஊராட்சிகளில் நியமிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி மாற்றத்திறனாளி நியமன உறுப்பினர் ஆகியோர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிக் கூட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சிவகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் வடிவேலு அவர்கள் கலந்துகொண்டு பேசியதாவது, “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் குரல் ஒலிக்கும் விதமாக மூன்றடுக்கு ஊராட்சி கட்டமைப்புகள், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ஒரு மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் நியமிக்கப்பட வேண்டுமென்று புதிய சட்டம் கொண்டு வந்து, அதனடிப்படையில் உங்களை நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறீர்கள். உங்கள் பகுதியில் உள்ள மக்களின் கோரிக்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் நிறைவேற்று அதிகாரம் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உங்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புகள் உணர்ந்து நீங்கள் செயல்பட வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எந்த நோக்கத்திற்காக உங்களை நியமனம் செய்திருக்கிறார்களோ அந்த நோக்கத்தினை 100% முழுமையாக நிறைவேற்றும் பொருட்டு உங்களின் செயல்பாடு அமைந்திட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். மேலும், இந்த பயிற்சிக் கூட்டத்தில் மாவட்ட வள பயிற்றுநர் வனிதா, மணிமேகலை ஆகியோர் கலந்து கொண்டு, நியமனம் மாற்றுத்திறனாளி உறுப்பினர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்கினர்.
Next Story
