முன்னாள் போலீஸ் ஐ.பி.எஸ். பொன் மாணிக்கவேல் பட்டங்கள் வழங்கி போலீசாருக்கு அறிவுரை

முன்னாள் போலீஸ் ஐ.பி.எஸ். பொன் மாணிக்கவேல் பட்டங்கள் வழங்கி போலீசாருக்கு அறிவுரை
X
குமாரபாளையம் ஜே.கே.கே. முனிராஜா கல்வி நிறுவனம் சார்பில் நடந்த , பட்டமளிப்பு விழாவில் தமிழக முன்னாள் போலீஸ் ஐ.பி.எஸ். பொன் மாணிக்கவேல் பங்கேற்று பட்டங்கள் வழங்கி வாழ்த்தி பேசினார்.
குமாரபாளையம் ஜே.கே.கே. முனிராஜா கல்வி நிறுவனம் சார்பில் நடந்த , பட்டமளிப்பு விழாவில் கல்லூரி தலைவர் வசந்தகுமாரி முனிராஜா, தாளாளர் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தனர். இயக்குனர்கள் கைலாஷ் ராஜா, ஸ்ரீநித்யா, கரன்ராஜா உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழக முன்னாள் போலீஸ் ஐ.பி.எஸ். பொன் மாணிக்கவேல் பங்கேற்று 800 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கி வாழ்த்தி பேசினார். தமிழக முன்னாள் போலீஸ் ஐ.பி.எஸ். பொன் மாணிக்கவேல் பேசியதாவது: ஒவ்வொரு மனிதனுக்கும் ஒழுக்கம் மிக முக்கியம். ஒழுக்கம் இல்லாதவன் போலீசாரால் பிடிபடுகிறான். பதிக்கப்பட்ட பொதுமக்கள் போலீசில் நேரிடையாக புகார் கடிதம் கொடுக்க வேண்டாம். மெயில் மூலம் அனுப்பி வைத்து போலீசாரை விசாரணை செய்யச் சொல்லுங்கள். ரசீது கேட்டு வாங்குங்கள். போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க யார் வந்தாலும் போலீசார் சேரில் அமர வைத்து விசாரணை செய்ய வேண்டும். புகார் கொடுக்க வந்தவரை மதிக்க வேண்டும். பெண்களிடம் போலீஸ் ஸ்டேஷன் வரவழைத்து விசாரணை செய்யக்கூடாது. அவர்கள் வீட்டுக்கு போலீசார் நேரில் சென்று விசாரணை செய்ய வேண்டும். ஆணோ, பெண்ணோ, 65 வயதுக்கு மேல் ஆனால், அவர்கள் வீட்டிற்கு சென்றுதான் போலீஸ் விசாரணை செய்ய வேண்டும். இதில் போலீசார் யார் கடைப்பிடிக்கிறார்கள். நான் எனது 35 ஆண்டு பணிக்காலத்தில் இதுவரை பயணப்படி ஒரு ரூபாய் கூட வாங்கியது இல்லை.எனக்குச் சேர வேண்டிய பயணப்படி இதுவரை ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும். மாணவ செல்வங்கள் ஒழுக்கத்தை கடை பிடித்தால் வாழ்வில் வெற்றியை பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.
Next Story