திருச்செங்கோடு நகர திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
Tiruchengode King 24x7 |25 Jan 2026 9:29 PM ISTதிருச்செங்கோடு நகர திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தலைமைக் கழகப் பேச்சாளர்கள் ராஜா தமிழ் மாறன் சுந்தரேசன் ஆகியோர் கலந்து கொண்டு இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழக அரசியலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்து பேசினார்கள்
நாமக்கல் மேற்கு மாவட்டம் திருச்செங்கோடு கிழக்கு மற்றும் மேற்கு நகர திமுக மற்றும் மாவட்ட மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு கிழக்கு மற்றும் மேற்கு நகர செயலாளர்கள் ஆர் நடேசன் கார்த்திகேயன் ஆகியோர் தலைமை வகித்தனர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியம் அனைவரையும் வரவேற்றார் சிறப்பு அழைப்பாளர்களாகநாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே எஸ் மூர்த்தி தலைமைக் கழக பேச்சாளர் ராஜா தமிழ்மாறன் தலைமைக் கழக பேச்சாளர் சுந்தரேசன் இளம் பேச்சாளர் நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசிய போது கூறியதாவது மொழிப்போர் தமிழ்நாட்டு அரசியலில் மறக்க முடியாத ஒரு அத்தியாயம் இந்த மொழிப்போரால் உயிரிழந்த தியாகிகளுக்குவீரவணக்கம் செலுத்த இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது இந்தி திணிப்பு என்றும் எதிர்ப்போம் என்பதுதான் திமுகவின் மிக முக்கியமான கொள்கைகளில் ஒன்றாகும் தமிழுக்கு ஊரு நேர்ந்தால் இன்னுரையும் தருவோம் என உயிர் நீத்த தியாகிகளை நினைவு கூறும் வகையில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி எத்தனை பட்டாளம் கூட்டி வரும் அத்தனையும் கடைபிடிப்போம் என்று தன் இளம் வயதில் கொடி ஏந்தி போராடியவர் தலைவர் கலைஞர் அவர் வழியில் தொடர்ந்து திமுக இந்தி திணிப்பை என்றும் எதிர்த்து வருகிறது நேரடியாகவோ மறைமுகமாகவோ திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் வரை இந்தியை தமிழகத்திற்குள் கொண்டுவர முடியாது எனக் கூறினார்கள் கூட்டத்தில் மொழிப்போர் தியாகி பரமானந்தத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மாணவரணி நிர்வாகிகள் ஒன்றிய பேரூர் கழக இளைஞர் அணி மகளிர் அணி நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story


