திருச்செங்கோட்டை அடுத்த நல்லாம்பாளையம்பகுதியில் ரோட்டில் நின்று கொண்டிருந்த லாரி மீது வேகமாக வந்த ஸ்கோடா கார் மோதல் சிசிடிவி காட்சிகள் வைரல்

திருச்செங்கோட்டை அடுத்த நல்லாம்பாளையம்பகுதியில் ரோட்டில் நின்று கொண்டிருந்த லாரி மீது வேகமாக வந்த ஸ்கோடா கார் மோதல் காரை ஓட்டி வந்த ராஜேந்திர பாபு என்பவருக்கு கை எலும்பு முறிவு உடன் வந்த மனைவி சுகந்திக்கு லேசான காயம் சிசிடிவி காட்சிகள் வைரல்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்குருசாமிபாளையம் பத்திரகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திர பாபு 58 இவர் தனது மனைவி சுகந்தி 57 உடன் திருச்செங்கோட்டில் இருந்து குருசாமி பாளையம்நோக்கி தனது ஸ்கோடா ரேபிட் காரில் செல்லும்போது நல்லாம்பாளையம்குருசாமி ஏஜென்சி அருகேவந்து கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி ரோட்டின் வலது புறம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் வேகமாக மோதியது.இதில் காரை ஓட்டி வந்த ராஜேந்திர பாபுவுக்கு கைப்பறிவும் லேசான சிராய்ப்பு காயமும் ஏற்பட்டது உடன் வந்து அவரது மனைவி லேசான சிராய்ப்பு காயம்ஏற்பட்டது நல்வாய்ப்பாகஎந்த உயிரிழப்பு பெரும் சேதமும் ஏற்படவில்லை. கார் அப்பளம் போல் நொறுங்கியது.சம்பவத்தை நேரில் கண்ட அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து இருவரையும் சேலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் கார் லாரியில் மோதும் சிசிடிவி காட்சி வைரலாக பரவி வருகிறது.
Next Story