புதுக்கோட்டையில் மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டம்

X
Pudukkottai King 24x7 |26 Jan 2026 9:50 AM ISTபுதுக்கோட்டை வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில் "மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் நாள்" பொதுக்கூட்டம் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் கே.கே .செல்ல பாண்டியன்அவர்கள் தலைமையில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் KSC.இளையசூரியன் வரவேற்பில்
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில் "மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் நாள்" பொதுக்கூட்டம் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் கே.கே .செல்ல பாண்டியன்அவர்கள் தலைமையில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் KSC.இளையசூரியன் வரவேற்பில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் செ.பிரசன்னா, R.ரெத்தினசபாபதி, சிப்காட் B.சதீஸ்குமார், கோ.அண்ணாதுரை ஆகியோர் ஒருங்கிணைப்பில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் குத்தாலம் க.அன்பழகன் ExMLA அவர்கள், தலைமை கழக பேச்சாளர் துரை.தமிழ்ச்செல்வன் அவர்கள், கழக இளம் பேச்சாளர்கள் சா.சஸ்ரினா பிர்தவுஸ், சொ.தமிழினியன் ஆகியோர் வீரவணக்க நாள் பேருரையாற்றினார்கள். முன்னதாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் VR.கார்த்திக் தொண்டைமான், கழக மருத்துவரணி இணை செயலாளர் டாக்டர் அண்ணாமலை ரகுபதி, புதுக்கோட்டை மாநகர மேயர் திலகவதி செந்தில் துணை மேயரும் வடக்கு மாநகர பொறுப்பாளருமான M.லியாகத் அலி, தெற்கு மாநகர பொறுப்பாளர் வே. ராஜேஷ் உள்ளிட்ட மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர், வட்ட, கிளை கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புகள், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று சிறப்பித்தனர். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பெ.தெய்வானை நன்றி கூறினார்.
Next Story
