மெட்டாலா இலொயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்...

மெட்டாலா இலொயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்...
X
மெட்டாலா இலொயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்...
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் மெட்டாலா இலொயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் 26.01.2026 திங்கட்கிழமை இறை வணக்கப் பாடலுடன் இனிதே தொடங்கியது. இவ்விழாவைச் சிறப்பிக்கும் வகையில் கல்லூரியின் அதிபர் தந்தை முனைவர் தோமினிக் ஜெயக்குமார் சே.ச. முன்னாள் மாணவர் மன்ற இயக்குனரும் கல்லூரிச் செயலாளர்மான அருட்தந்தை முனைவர் டேனிஸ் பொன்னையா ,சே.ச., கல்லூரியின் முதல்வர் முனைவர். சோஸ்ப்பின் டெய்சி, துணை முதல்வர்கள், பேராசிரியர்கள். ஆசிரியரல்லாப் பணியாளர்கள், மற்றும் முன்னாள் மாணவ-மாணவிகள் போன்றோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற காலத்துக் கல்லூரி அனுபவங்களையும், வாழ்க்கை அனுபங்களையும், அனைவரும் பகிர்ந்து கொண்டனர். மேலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் வைத்து அதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டனர். பின்னர் தங்கள் ஆசிரியர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். மேலும், கலை நிகழ்ச்சிகள், பேராசிரியர்கள் சந்திப்பு மகிழ்ச்சியுடன் இவ்விழா இனிதே நிறைவு பெற்றது.
Next Story